Maha: 10 killed, more than 20 injured as truck rams into highway hotel in Dhule | மஹாராஷ்டிராவில் வாகனங்கள் மீது கன்டெய்னர் மோதல்: 10 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: மஹாராஷ்டிராவில் துலே மாவட்டத்தில், கன்டெய்னர் ஒன்று, பல வாகனங்கள் மீது மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பால்சநெர் கிராமத்தில், மும்பை ஆக்ரா நெடுஞ்சாலையில் இருந்து ம.பி.,யை நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் டிரக், பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து அந்த டிரக், மோட்டார் சைக்கிள், டூவீலர்கள் மீது மோதியதுடன், மற்றொரு கன்டெய்னர் மீதும் மோதியது. பிறகு, அருகில் இருந்த ஓட்டல் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் மீதும் மோதி கவிழ்ந்தது.

latest tamil news

இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தவர்களும் அடங்குவார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.