வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
ப்பா ..இவர்கள் ரொம்ப பர்ஃபெக்ட். இவர் செய்யும் காரியங்கள் எல்லாம் தனித்துவமாக இருக்கும். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லையே..? என்னால் அது போல் பர்ஃபெக்ட்டாக எதிலும் இருக்க முடியவில்லையே ன்னு அங்காலய்பவர்கள் நிறைய பேர் நம்மைச் சுற்றி. சமீபத்தில் என் தோழியின் மருமகளை மருத்துவமனையில் பார்க்க நேர்ந்தது அப்போது என் கையைப் பிடித்துக் கொண்டு ஆன்ட்டி எப்படி இருக்கிறீர்கள் ஆன்ட்டி உங்களிடம் வெகு நாட்களாக கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வியை வைத்திருந்தேன் .இப்போது கேட்கலாமா ?என்றாள்.
கேள் இலக்கியா என்றேன்.
ஏன் ஆன்ட்டி என்னால் என் அத்தையை போல் பர்ஃபெக்ட் ஆக இருக்க முடியவில்லை.. நான் செய்யும் வேலைகள் எல்லாம் அரைகுறையாக தான் தெரிகிறது அப்படி இப்படின்னு ஒரே புலம்பல் ஸ் . அவளை சற்றே ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்து,
அன்பு மகளே இலக்கியா… இது எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை எதற்காக அவள்?
கண்ணைத்துடைத்துக் கொள்.
இப்ப நீ ஒரு பில்டர் காபி போடற.. அல்லது பிள்ளைகளின் புத்தகங்களுக்கு அட்டை போடுற.. அல்லது வாசலில் அழகாக ரங்கோலி போடுற.. அல்லது மாடித் தோட்டத்தை சுத்தம் செய்ற…. இப்படி நீ செய்யும் எந்த வேலைகளிலும் உன் அர்ப்பணிப்பும் ரசனையும் 100% சரியாக இருக்கிறதா? என்று யோசித்திருக்கிறாயா?
அர்ப்பணிப்பு மிகச் சரியாக(100%) எங்கே இருக்கிறதோ, அங்கே பார்க்கும் கோணம் மாறுபடும் பார்வை மாறுபடும் . பார்க்கும் கோணம் மாறுபட்டால் நெருங்காதது எல்லாம் நெருங்கி வரும். பார்வை மாறுபட்டால் புரியாதது எல்லாம் புரியவரும். எல்லா வேலைகளும் சுத்தமாகவும் நன்றாகவும் அமையும் ஆக எந்த ஒரு சின்ன வேலை செய்தாலும் நம்மை தவிர வேறு யாராலும் (நம் கை பட்டாலொழிய) நன்றாக செய்ய முடியாது என்பதை மனதில் கொண்டு வா!(கர்வத்தினால் அல்ல.. தன்னம்பிக்கையினால்! கர்வம் வேறு தன்னம்பிக்கை வேறு )அது உன்னுள் இருக்கும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
எப்போது உனக்குள் உன்னை பற்றிய தன்னம்பிக்கை அதிகரிக்கிறதோ அப்போதே நீ செய்யும் வேலைகள் எல்லாம் மிகவும் பர்ஃபெக்டாக முழுமையானதாக மாறிவிடும் தனித்துவமாக தெரிவாய். ஆக இதில் ஒன்றும் பெரிய மேஜிக் எல்லாம் எதுவும் இல்லை .எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது.
வாசனையும் அர்ப்பணிப்பும் 100 சதவிகிதம் சரியாக இருந்தால்.. உன் கை பட்டக் கல் சிற்பமாகும் .உன் விரல் பட்ட வெள்ளை தாள் ஓவியம் ஆகும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை! முயன்றால் வானமே வசப்படும் போது பர்ஃபெக்டாக இருப்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன ?!
இது இலக்கியாவிற்கு மட்டும் சொன்னதல்ல நம்மில் பலரும் இப்படித்தான் யார் யாரையோ பார்த்து எதையெதையோ நினைத்து கொண்டு அவர்களது வேலையை (ஒழுங்கற்று) ஏனோ தானோ என்று செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்குமான பதில் தான் நான் கூறியது இந்த நிமிடத்திலிருந்து நீங்கள் செய்யும் வேலைகளை ரசனையோடு அர்ப்பணிப்போடு செய்யத் தொடங்குங்கள் . அப்புறம் பாருங்கள் நீங்கள் எப்படி வானத்து நிலா போல் ஜொலிக்கிறீர்கள் என்று!
என்றென்றும் அன்புடன்
ஆதிரைவேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.