வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புட்டபர்த்தி: நாட்டில் ஆன்மிக மையங்கள் புத்துயிர் பெற்று வருகின்றன எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது எனக் கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஸ்ரீசத்ய சாய் பாபாவால் ஈர்க்கப்பட்டு உள்ளேன்.
இந்த கன்வென்ஷன் மையத்தின் படங்களை பார்த்தேன். இந்த மையம், ஆன்மிக மாநாடுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளுக்கான மையம் ஆக இருக்கும். உலகம் முழுவதிலும் இருந்து நிபுணர்கள் இங்கு வருவார்கள். இந்த மையம் இளைஞர்களுக்கு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தியா தனது கடமைக்கு முன்னுரிமை அளிக்கிறது. அடுத்த 25 ஆண்டுகள், நமது கடமைக்கான காலமாக இருக்கப் போகிறது. பெரும்பாலும், நம் நாட்டில் துறவிகளை ஓடும் நீர் என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு போதும் தங்கள் எண்ணங்களோடு நின்று விடுவது கிடையாது. அவர்கள் தங்கள் செயல்களோடு நிறுத்த மாட்டார்கள். தொடர் ஓட்டமும், தொடர் முயற்சியும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
உலகின் 5 மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பெரிய ஸ்டார்ட் அப்கள் கொண்ட 3வது நாடாக இந்தியா உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் உள்ளிட்ட துறைகளில் வளர்ந்த நாடுகளுடன் இந்தியா போட்டியிடுகிறது. உலகளவில் நடக்கும் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றத்தில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது.நாட்டில் ஆன்மிக மையங்கள் புத்துயிர் பெறுகின்றன.
அதே நேரத்தில் இந்தியா பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது. நிலையான வளர்ச்சியே அரசின் முக்கிய நோக்கம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement