பெங்களூரு: எதிர்காலத்தில் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிடுவோம் என பாஜ., தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் விலகி, சிவசேனா – பா.ஜ., கூட்டணி இணைந்தார். இதையடுத்து, அவர் மஹா., துணை முதல்வராக பதவியேற்றார். அவருடைய ஆதரவாளர்கள் எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மஹாராஷ்டிராவை போன்ற அதிர்ச்சி நிகழ்வு கர்நாடகாவிலும் நடக்கலாம். பாஜ., வை ஆதரிக்கப்போவதாக அஜித் பவார் அறிவித்தவுடன் கர்நாடகாவில் என்ன நடக்கப்போகிறதோ என்று அஞ்சினேன். கர்நாடகாவின் அஜித் பவார் யார் என்று பார்க்க காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று(ஜூலை 04) கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் குமாரசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு எடியூரப்பா பதில் அளித்து கூறியதாவது: குமாரசாமி சொன்னது முற்றிலும் உண்மை.
அவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். குமராசாமியும் நாங்களும் எதிர்காலத்தில் இணைந்து போட்டியிடுவோம். கர்நாடக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement