வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் நடத்திய சோதனையில் ரூ. 3 கோடி மதிப்பிலான யு.ஏ.இ. கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பையிலிருந்த துபாய் செல்லும் பயணி ஒருவரிடம் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் சில வெளிநாட்டு கரன்சிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவை யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரக நாட்டு கரன்சி என தெரியவந்தது. கரன்சிகளை பதுக்கி வைத்திருந்த அந்த பயணி பெயர் லியாகத் அப்துல்லா என்பதும் தெரியவந்தது.. வெளிநாட்டு கரன்சியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்து வுருகின்றனர். அதன் இந்திய மதிப்பு ரூ. 3 கோடி என தெரியவருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement