சிம்லா:
சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின சிறுவனின் தலையில் பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. அவர் மீதான பயத்தால் அந்த சிறுவனும், அவரது குடும்பத்தினரும் போலீஸில் புகார் அளிக்காமல் உள்ளனர்.
இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பள்ளியில் பொதுவான குடிநீர் பானையில் நீர் அருந்தியதால் 10-ம் வகுப்பு தலித் மாணவன் அடித்துக் கொலை, கிரிக்கெட் பந்தை தொட்டதால் தலித் சிறுவனின் விரல் வெட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் வட மாநிலங்களில் அன்றாடம் நடந்து வருகின்றன.
வட மாநிலங்களில்தான் இப்படி என்று பார்த்தால் தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழகத்திலும் இந்த சாதிக் கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் வேங்கைவயல் சம்பவத்தை விட வேறு உதாரணம் வேண்டுமா?
இதுபோன்ற சூழலில், மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கும் ஒரு சம்பவத்தை நம் ரத்தத்தை கொதிக்க வைக்கின்றன. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள சித்தி மாவட்டத்தில் பாஜக இளைஞரணி தலைவராக இருப்பவர் ப்ரவேஷ் சுக்லா. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் தெருவோரத்தில் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
அதிர்ச்சி.. தமிழகத்தின் முக்கிய ரயில்களில் 2-ம் வகுப்பு பெட்டிகள் அகற்றம்.. ஏசி பெட்டிகள் அதிகரிப்பு
இந்நிலையில், அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், அங்கு சாலையோரம் அழுக்குபடிந்த கிழிந்த சட்டையுடன் அமர்ந்திருந்த பழங்குடியின சிறுவனை நோக்கி சென்றார். பின்னர் அப்படியே அந்த சிறுவனின் தலையில் அவர் சிறுநீர் கழித்தார். அப்போது அந்த சிறுவனின் பெற்றோர்கள், “ஐயா அப்படி செய்யாதீர்கள்.. அப்படி செய்யாதீர்கள்” எனக் கூறி அழுகின்றனர். ஆனால், அவரோ அந்த சிறுவன் மீது சிறுநீரை கழித்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.
பேராசிரியர் பணியிடங்களை எப்போது நிரப்பப் போகிறீர்கள்?.. தமிழக அரசுக்கு ஆளுநர் ரவி “நறுக்” கேள்வி
இதனிடையே, அங்கிருந்த ஒருவர் இந்த சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாக பரவி வருகிறது. பாஜக நிர்வாகியின் இந்த கேவலமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அந்த பழங்குடியின சிறுவனும், அவரது குடும்பத்தினரும் ப்ரவேஷ் சுக்லா மீது புகார் அளிக்க பயப்படுவதாக கூறப்படுகிறது.