வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங்கில் உள்ள ஒரு குளியல் இல்லம் ஆண் குழந்தைகளுடன் வரும் அம்மாக்களுக்கு உதவுவதற்காக (RENT A DAD) என்ற சேவையை துவக்கி உள்ளது.
குழந்தைகளை குளிப்பாட்டுவது, பராமரித்துக் கொள்வது போன்ற வேலைகளை வாடகை அப்பாக்கள் செய்வர் எனவும் குளியல் இல்லம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசு இருந்தால் வாழ்கையில் அனைத்தையும் வாங்கி விடலாம் என்ற காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அதேபோல் எதையும் வாடகைக்கு விடக்கூடிய கால சூழல் நிலவுகிறது. தனியாக பிள்ளைகளை கவனித்துக்கொள்ள முடியாமல் அவதிப்படும் தாய்மார்களுக்காக தந்தையும் வாடகைக்கு கிடைக்கின்றனர்.
ஆண் குழந்தைகளுடன் வரும் அம்மாக்களுக்கு உதவுவதற்காக (RENT A DAD) என்ற சேவையை சீனாவை சேர்ந்த ஒரு குளியல் இல்லம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குளியல் இல்லம் வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் என்ற இடத்தில் உள்ளது.
குழந்தைகளை குளிப்பாட்டுவது, பராமரித்துக் கொள்வது போன்ற வேலைகளை வாடகை அப்பாக்கள் செய்வர்; இதற்காக சேவை கட்டணம் வசூலிக்கப்படாததும், வரவேற்பை பெற்றுள்ளது.
இது குளியல் இல்லம் சார்பில் கூறியிருப்பதாவது: ஒரு பெண் தன் மகனுடன் இங்கு வந்தால், அப்பெண் தனது மகனை வாடகை தந்தை என அழைக்கப்டும் அந்த நபரிடம் ஒப்படைத்துவிட்டு, சுதந்திரமாக நீச்சல் குளத்தில் நீராடி அனுபவிக்க முடியும்.
வாடகை அப்பா அதுவரை உங்கள் மகனை பிள்ளை போல் பார்த்துக் கொள்வார், அவனை ஆண்களுக்கான குளியல் பிரிவிற்கு அழைத்துச்செல்வார் என அந்த குளியல் இல்லம் கூறுகிறது.
குழந்தைகளைக் கவனிக்கக் கிடைக்கும் ஆண்கள் அதற்கான சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கிறார்களா, எந்த வயது வரை குழந்தைகளைக் கவனிக்கிறார்கள் என்று குளியல் இல்லம் எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement