மும்பை: பாலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வரும் ரன்வீர் சிங் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பார்க்க காமெடி பீஸாக ஃபங்கியான உடைகளை போட்டு சுற்றித் திரிந்து வரும் ரன்வீர் சிங் நடிப்பு என்று வந்து விட்டால் தான் எப்படி நடிப்பேன் என பத்மாவத் படத்திலேயே காட்டி மிரட்டி இருப்பார்.
பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் தீபிகா படுகோனை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட ரன்வீர் சிங்கின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மற்றும் அவர் வாழ்ந்து வரும் ராஜ வாழ்க்கை குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
ரன்வீர் சிங் பிறந்தநாள்: 1985ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி மும்பையில் பிறந்த ரன்வீர் சிங் இன்று தனது 38வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். 2010ம் ஆண்டு வெளியான பேண்ட் பஜா பாரத் படத்தின் மூலம் ஹீரோவாக பாலிவுட்டில் அறிமுகமானவர் ரன்வீர் சிங்.
2013ல் வெளியான ராம் லீலா படத்தில் தீபிகா படுகோன் உடன் ஜோடி போட்டு நடித்த ரன்வீர் சிங் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், 83 உள்ளிட்ட பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
மனைவி தீபிகா படுகோன்: ராம் லீலா படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது. ஹாட்டான ஹேண்ட்ஸம் பாயான ரன்வீர் சிங்குடன் நடிகை தீபிகா படுகோன் காதலில் விழுந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் கணவனும் மனைவியும் படு பிசியாக நடித்து வரும் நிலையில், குழந்தைகள் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை.
ரன்வீர் சிங் சம்பளம்: ரன்வீர் சிங் நடிகை ஆலியா பட் உடன் இணைந்து நடித்த கல்லி பாய் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்தியா சார்பாக ஆஸ்கருக்கே இந்த படம் அனுப்பப்பட்டது. ஆனால், ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் கூட இந்த படம் தேர்வாகவில்லை என்பது தனிக்கதை.
தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங் விரைவில் ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்நிலையில், ஒரு படத்துக்கு சுமார் 20 கோடி முதல் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார் ரன்வீர் சிங் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கார், பைக் பிரியர்: ஹீரோக்கள் அதிகமாக விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கி தங்கள் கராஜில் அடுக்கி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரன்வீர் சிங்கிற்கும் அந்த ஆசை அதிகமாகவே உள்ளது.
லூட்டேரா படத்தை முடித்த பின்னர் அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட வின்டேஜ் ஏரியல் பைக்கை இவருக்கு படத் தயாரிப்பாளர் பரிசாக அளித்தார். 7 லட்சம் மதிப்புள்ள அந்த பைக்கை பல ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருக்கிறார் ரன்வீர் சிங்.
3.2 கோடி மதிப்புள்ள ஆஸ்டன் மார்ட்டின் கார், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் மற்றும் 1.8 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் உள்ளிட்ட டாப் கிளாஸ் காஸ்ட்லி கார்களை வைத்துள்ளார் ரன்வீர் சிங்.
300 கோடி சொத்து: சினிமாவை தாண்டி விளம்பரப் படங்கள், ஃபேஷன் ஆடை நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடர் என அமோகமாக சம்பாதித்து வருகிறார் ரன்வீர் சிங்.
தீபிகா படுகோன் சேர்த்து வைத்துள்ள சொத்து இல்லாமல், தனிப்பட்ட முறையில் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 344 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மனைவியுடன் வருஷத்துக்கு 4 முறை வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடித்து வரும் ரன்வீர் சிங் நடிப்பு மற்றும் குடும்ப வாழ்க்கையை பேலன்ஸாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.