குவஹாத்தி, அசாமில் லஞ்சம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட புகார்களில் சிக்கிய நான்கு போலீசாரை, ‘டிஸ்மிஸ்’ செய்து அம்மாநில டி.ஜி.பி., சிங் உத்தரவிட்டுள்ளார்.
வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில டி.ஜி.பி., சிங் நேற்று கூறியதாவது:
ஊழல் புகாரில் சிக்கிய மியாசந்த் அலி, கடந்த ஏப்., 17ல் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், முறைகேடு புகாரில் கான்ஸ்டபிள் ஸ்வரஸ்வதி ஹஸ்னு, மே 16ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். லஞ்சம் வாங்கியது தொடர்பான புகாரில், சப்- — இன்ஸ்பெக்டர் நிபு கலிதா, ஜூன் 27ல் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில், ஜூன் 29ல் இன்ஸ்பெக்டர் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன்களில் முறைகேடுகளில் ஈடுபடும் போலீசார், பெண்கள், குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்ளும் போலீசாருக்கு இந்த நிலை தான் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 போலீசார் ‘சஸ்பெண்ட்’
ம.பி., மாநிலம் நரசிங்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்டேகான் என்ற இடத்திற்கு, போதைப் பொருள் கடத்தல்காரர்களை பிடிக்க போலீசார் சென்றனர். இருவரை பிடித்து காரில் போலீசார் அழைத்து வந்த போது, பெண் ஒருவர், காரின் பானெட்டில் விழுந்து அதை பிடித்தபடி தொங்கினார். இருந்தும் கார் நிற்காமல் சென்றபடி இருந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, மூன்று போலீசாரை, ‘சஸ்பெண்ட்’ செய்து அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement