Maamannan: அப்படியொரு மிரட்டலான நடிப்பு.. சூர்யாவுக்கு லேப்டாப் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தில் இளம் அதிவீரனாக நடித்த நடிகர் சூர்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் லேப்டாப் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

போர் தொழில் படத்தைத் தொடர்ந்து 50 கோடி கிளப்பில் விரைவில் இணைய காத்திருக்கிறது மாமன்னன் திரைப்படம் 45 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் தனிப்பட்ட முறையில் உதயநிதி ஸ்டாலின் அங்கீகரித்து அவர்களுக்கு உண்டான மரியாதையை செலுத்தி வருகிறார்.

மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர்: உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களிலேயே எந்தவொரு படமும் இந்த அளவுக்கு மிகப்பெரிய ஹிட் அடிக்கவில்லை. மேலும், சமூகத்தில் ஏகப்பட்ட தாக்கங்களையும் விவாதங்களையும் கிளப்பவில்லை.

இந்நிலையில், தனக்கு அப்படியொரு படத்தை கடைசி படமாக எடுத்துக் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி மினி கூப்பர் காரை பரிசாக அளித்தார்.

Udhayanidhi Stalin gifts laptop for Maamannan junior artist Suriya

வடிவேலுவுக்கு தனி மரியாதை: மாமன்னன் படத்தின் சக்சஸ் பார்ட்டி உள்ளிட்ட எங்கேயும் படத்தின் நிஜ நாயகன் வைகைப்புயல் வடிவேலுவை காணவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், வடிவேலுவின் வீட்டுக்கே சென்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

சந்திரமுகி 2 படத்தில் காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் வடிவேலு மீண்டும் மாரி செல்வராஜின் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Udhayanidhi Stalin gifts laptop for Maamannan junior artist Suriya

உதயநிதியின் யங் வெர்ஷன்: மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்ன பிரச்சனை ஏன் 15 ஆண்டுகள் பேசிக் கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதற்காக வரும் பிளாஷ்பேக் போர்ஷனில் அந்த குளத்தில் கல்லடி பட்டு நண்பர்கள் இறக்க, அந்த வலியோடு தப்பித்து வரும் இளம் அதிவீரனாக நடித்த நடிகர் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த இளம் நடிகர் சூர்யாவை பாராட்டி அவருக்கு பரிசு ஒன்றையும் வழங்கி உள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanidhi Stalin gifts laptop for Maamannan junior artist Suriya

லேப்டாப் பரிசு: மாமன்னன் படத்தில் உயிரைக் கொடுத்து நடித்த அந்த இளம் நடிகர் சூர்யாவையும் பாராட்டிய உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து லேப்டாப் பரிசு ஒன்றை கல்லூரியில் படித்து வரும் அந்த மாணவனின் படிப்புக்காக வழங்கி உள்ளார்.

தற்போது இணையத்தில் அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாரமும் தமிழ் சினிமாவில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், மாமன்னன் இந்த வீக்கெண்டும் வசூல் வேட்டை நடத்துவான் என்பது கன்ஃபார்ம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.