Tension in New Delhi court premises due to firing | புதுடில்லி கோர்ட் வளாகத்தில் துப்பாக்கி சூட்டால் பதற்றம்

புதுடில்லி, தீஷ் ஹசாரி கோர்ட் வளாகத்தில், வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலின் போது, இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டது பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

புதுடில்லி தீஷ் ஹசாரி கோர்ட் வளாகத்தில் நேற்று விசாரணைக்காக ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.

அப்போது, வாகன நிறுத்தம், அறை ஒதுக்கீடு விவகாரத்தில் இரு தரப்பு வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கி சத்தம் கேட்டு விரைந்து வந்த போலீசார், மோதிய வழக்கறிஞர்களை அப்புறப்படுத்தினர்.

”இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என, புதுடில்லி வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சாகர் சிங் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.