தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் விஜய். இவரது நடிப்பில் தற்போது ‘லியோ’ படம் உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. அத்துடன் இந்த ‘நா ரெடி’ பாடல் சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்நிலையில் ராஜேஷ் பிரியா என்பவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக்கூறி புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் கோலிவுட் சினிமா மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ‘நா ரெடி’ பாடல் அண்மையில் வெளியானது. விஜய் குரலில் அனிருத் இசையில் வெளியான இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்பாடலில் முழுக்க விஜய் புகைப்பிடித்தவாறு நடித்துள்ளது கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இப்பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் ரசிகர்களை தவறாக வழிநடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தது. அது மட்டுமில்லாமல் புகாரும் அளிக்கப்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘நா ரெடி’ பாடலில் புகைப்பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொள்ளும் என்ற எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்தனர் படக்குழுவினர்.
இந்நிலையில் இப்பாடலுக்கு எதிராக டிஜிபி அலுவலத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 வயது சிறு குழந்தைகளும் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். 3 வயது சிறுவன் விஜய் சிகரெட் பிடிப்பதை பார்க்கும் போது தானும் பெரிய ஆளாகி அவரைப்போல் சிகரெட் பிடிக்க நினைத்தால் எனன் செய்ய முடியும். யாராவது தடுக்க முடியுமா?
Salaar: ‘கேஜிஎஃப்’ மூன்றாம் பாகமா..?: ‘சலார்’ டீசரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா.!
சினிமாவுக்கு தேவைப்பட்டால் அக்டோபர் மாதம் வெளியிட்டு இருக்கலாம். படம் வருவதற்கு முன்னாள் ஏன் பாட்டை வெளியிட்டாங்க. 53 சதவீதம் பேர் புகைப்பிடிப்பதற்கு நடிகர்கள் தான் காரணம் என ஆய்வு சொல்கிறது. இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் நான் பதிவிட்ட போது என்னை ஆபாசமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் கமெண்ட் செய்கின்றனர். அவர்களுக்கு விஜய் தான் பணம் கொடுத்து இதுபோன்ற வேலையை செய்கிறார். அதனால் நடிகர் விஜய்யை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் மற்றும் அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள ‘லியோ’ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Maamannan:வடிவேலுக்கு தேசிய விருது கொடுக்கணும்: மாமன்னனை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்.!