சென்னை: நடிகை கிரண் கோவாவில் இருந்து ஒரு வழியாக மும்பைக்கு சென்று விட்டதாக தனது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆனால், கோவாவில் எப்படி மது அருந்தும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தாரோ அதே போலவே மும்பைக்கு சென்ற நிலையில், அங்கேயும் பிரபல பார் ஒன்றில் எடுத்துக் கொண்ட போட்டோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் பதிவிட்டுள்ளார்.
கிரணை சும்மா பார்த்தாலே கிக் ஏறுது என கமெண்ட் போட்டு வரும் ரசிகர்கள் இப்படி பாரில் ஏகப்பட்ட சரக்கு பாட்டிலுக்கு நடுவே பார்த்தால் செம போதை ஆகிடும் என கமெண்ட்டுகளை பறக்க விட்டு வருகின்றனர்.
அன்பே சிவம் சீன்: கோவாவுக்கு சம்மர் டூர் சென்றிருந்த நடிகை கிரண் அங்கேயே ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோக்களையும் சில பிகினி பிக்ஸையும் வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பழைய ஞாபகம் வந்துடுச்சு போல கமல்ஹாசன் உடன் சேர்ந்து நடித்த அன்பே சிவம் படத்தில் இருந்து சூப்பரான ஒரு ரொமான்டிக் சீனை ஷேர் செய்து இருந்தார் நடிகை கிரண். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மீண்டும் உங்களை இந்த மாதிரி பார்க்கணும் மேடம் என கமெண்ட்டுகளை தட்டி விட்டனர்.
கிளாமர் கிரண்: மேலும், நடிகை கிரண் டிவியில் ஆல்பம் பாடல் ஒன்றை போட்டு விட்டு அதன் முன்பாக படு கிளாமர் உடையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோ ஒன்றையும் சமீபத்தில் பதிவிட்டு ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி இருந்தார்.
இந்நிலையில், கோவாவில் இருந்து அவர் மும்பைக்கு சென்றுள்ளதாக தற்போது பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை பாரில்: நடிகை கிரண் சமீப காலமாக செம போல்டாக ஏகப்பட்ட போஸ்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகிறார். கோவாவில் சரக்கடிக்கும் சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய கிரண், தற்போது மும்பையில் உள்ள ஆலிவர் பாருக்கு சென்று எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏகப்பட்ட சரக்கு பாட்டில்கள் சூழ நடிகை கிரண் கிக்கேற்றும் போதை லுக்கில் போஸ் கொடுத்து இளைஞர்களை இப்படி கிறங்கடித்து வருகிறாரே என நெட்டிசன்கள் புலம்பித் தவிக்கின்றனர். மேலும், அதற்கு கேப்ஷனாக It’s fun without the sin என கேப்ஷன் போட்டுள்ளார்.