தலைமை ஆசிரியர் பணியிடங்கள்: பள்ளி கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. கல்வி ஆண்டு தொடங்கி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால் பல்வேறு பணிகள் தேக்கமடைந்துள்ளன.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் க.அறிவொளி வெளியிட்டுள்ளார்.

யாருக்கு வாய்ப்பு இல்லை!

இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் யாரை பரிந்துரை செய்யக்கூடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்கள்,17 A, 17 B போன்ற பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்கள்,பல்வேறு பிரச்சினைகளில் தண்டனை பெற்று, தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்கள்
ஆகியோரை தலைமை ஆசிரியர் பதவிக்கு பரிந்துரைக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த புகாருக்கும் உள்ளாகாத, குற்றவியல் வழக்குகளில் சிக்காத ஆசிரியர்கள் மட்டுமே பதவி உயர்வு கலந்தாய்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் தயாரிக்கும் பணி!

இதன் அடிப்படையில் தகுதிவாய்ந்த முதுகலை ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. விரைவில் கலந்தாய்வு நடத்தி, தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.