லண்டன் : ஆபாச பட விவகாரத்தில், பி.பி.சி., நிறுவனத்தின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதற்கான வயது, 16 ஆகும். அதே நேரத்தில், 18 வயதுக்குட்பட்டவர்களை ஆபாச படம் எடுப்பது குற்றமாகும்.
தலைநகர் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், பி.பி.சி., ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் மீது இது தொடர்பாக புகார் கூறப்பட்டுள்ளது.
17 வயதுக்குட்பட்ட ஒருவருக்கு பணம் கொடுத்து, ஆபாச படங்கள் பெற்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து, 17 வயதுக்குட்பட்டவரின் தாய் புகார் அளித்துள்ளார். அந்தப் பணத்தில், அந்த நபர், போதைப் பொருள் வாங்கி, தற்போது அதற்கு அடிமையாகியுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
அந்த தொகுப்பாளரின் பெயர் வெளியிடப்படவில்லை. அதுபோல, 17 வயதுக்குட்பட்டவர், ஆணா, பெண்ணா என்பதும், பெயரும் வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் மற்றொரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுக்கும்படி, பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், அந்த தொகுப்பாளர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக, பி.பி.சி., நேற்று தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement