நான்காவது முறையாக இணைந்த வெற்றி கூட்டணி!
தெலுங்கு நடிகர் ரவி தேஜா தற்போது ஈகிள், டைகர் நாகேஸ்வர ராவ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடிக்கிறார் என்று மோஷன் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கு முன் இருவரும் இணைந்து டான் சீனு, பல்பு, க்ராக் என ஹாட்ரிக் வெற்றி படங்களை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இதுவரை ரவி தேஜா நடிக்காத கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர்.