பிரபல கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் தமிழ் சினிமாவில் கெளரவம், வீட்ல விசேஷங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்தவர். அண்மையில் இவரும் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபுவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் கல்யாணம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
பவித்ரா லோகேஷ், நரேஷ் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் டேட்டிங் செல்லும் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. 60 வயதான நடிகர் நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனவர். தற்போது நான்காவது முறையாக பவித்ரா லோகேஷை திருமணம் செய்துள்ளார் நரேஷ் பாபு.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இவர்கள் இருவரின் திருமணம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. கல்யாணம் முடிந்த கையோடு நரேஷ் பாபு, பவித்ரா லோகேஷ் இருவரும் துபாய்க்கு ஹனிமூன் கிளம்பி சென்றனர். இவர்களின் இந்த திருமண நிகழ்வு தெலுங்கு பட உலகில் பரபரப்பை கிளப்பியது.
Simbu: ‘எஸ் டி ஆர் 48’ படத்திற்காக சிம்பு செய்யப்போகும் காரியம்: இதை சத்தியமா எதிர்பார்க்கல..!
இந்நிலையில் கடந்த மே மாதம் பவித்ரா லோகேஷ், நரேஷ் பாபு இருவரும் இணைந்து நடித்த ‘மல்லி பெல்லி’ படம் திரையரங்குகளில் வெளியானது. இவர்களின் காதல் கதையை பிரதிபலிக்கும் விதமாக இந்தப்படத்தை உருவாக்கி இருந்தனர். திரையரங்கை தொடர்ந்து இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்நிலையில் ‘மல்லி பெல்லி’ படத்தில் தன்னை இழிவுப்படுத்தும் காட்சிகள் இருப்பதாகவும், எனவே படத்தை ஓடிடியில் நீக்க வேண்டும் என்றும் நரேஷின் மூன்றாவது மனைவி ரம்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து ‘மல்லி பெல்லி’ படம் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
Sivakarthikeyan: தனுஷை பார்த்து சிவகார்த்திகேயனுக்கு வந்துள்ள ‘அந்த’ ஆசை: அதிரடி முடிவு.!