வரும் ஆகஸ்ட் 23, 2023-ல் அறிமுகம் செய்யப்பட உள்ள டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் க்ரியோன் கான்செப்ட்டின் அடிப்படையில் எலக்ட்ரிக் என்டார்க் ஸ்கூட்டர் ஸ்போர்ட்டிவான ஸ்டைலை பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம்.
2018 ஆட்டோ எக்ஸ்போவில் க்ரியோன் ஸ்கூட்டர் கான்செப்ட்டை காட்சிப்படுத்தியிருந்த டிவிஎஸ் அதன் அடிப்படையிலான மாடலை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே, டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.
TVS ENtorq Escooter
இ-என்டார்க் ஸ்கூட்டரில் 3 லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற 12 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0-60 கிமீ வேகத்தை மணிக்கு எட்டுவதற்கு 5.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இதில் இடம்பெற உள்ள பேட்டரி 80 சதவீத சார்ஜிங் ஆவதற்கு அதிகபட்சமாக 60 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். க்ரியோன் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 100-150 கிமீ தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சார ஸ்கூட்டருக்கு வழங்கப்பட உள்ள ஆப் வழியாக பல்வேறு கனெக்ட்டிவ் அம்சங்கள் ரீஜெனேர்ட்டிவ் பிரேக்கிங், பார்க்கிங் அசிஸ்ட், ஜிபிஎஸ் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்க உள்ளது.
புதிய டிவிஎஸ் இஎன்டார்க் விலை ரூ.1.80 லட்சத்திற்குள் அறிமுகம் செய்யப்படலாம்.