நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் வரும் காவாலா பாடலை முதலில் வெளியிட்டார்கள். அனிருத் இசையில் ஜானி மாஸ்டர் சொல்லிக் கொடுத்த ஸ்டெப்ஸை பக்காவாக ஆடியிருந்தார் தமன்னா.
திமுகவில் சாதிய பாகுபாடா?ரஞ்சித் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் உதயநிதி பதில்!!
காவாலா பாடல் வெளியானதில் இருந்து அனைவரும் அதை பாடுவதுடன், தமன்னா மாதிரி டான்ஸும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். காவாலா பாடலுக்கு இதுவரை 20 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்திருக்கிறது.
ஊரே தமன்னாவின் டான்ஸை பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காவாலா பாடலை தமன்னாவின் காதலர் விஜய் வர்மாவும் பார்த்திருக்கிறார். பாடல் வீடியோவை பார்த்த அவர் இன்ஸ்டா ஸ்டோரீஸில் கூறியிருப்பதாவது,
இந்த பாடல் நெருப்பாக இருக்கிறது. சினிமாவின் கடவுள் மற்றும் பெண் கடவுள் என பாராட்டியிருக்கிறார்.
விஜய் வர்மாவை காதலிப்பதை அண்மையில் தான் உறுதி செய்தார் தமன்னா. லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப்தொடரில் சேர்ந்து நடித்தபோது தமன்னாவுக்கும், விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
விஜய் வர்மா பற்றி தமன்னா பேட்டி ஒன்றில் கூறியதாவது,
பெரிதாக சாதித்த பெண்களிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது. எதையும் பெற கடினமாக உழைக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் விஜய் விஷயத்தில் அப்படி இல்லை. அவர் மீது எனக்கு நிறைய அக்கறை உண்டு. என் மகிழ்ச்சியான இடம் விஜய். அவரிடம் நான் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம்.
Jailer: காவாலா பாடல் பற்றி அனிருத் சொன்னது நடந்துடுச்சு: அருண்ராஜா காமராஜ்
என்னை அப்படியே ஏற்றுக் கொண்டார். நான் உருவாக்கி வைத்திருக்கும் உலகத்தை புரிந்து கொண்டார். அதை மாற்ற அவர் நினைக்கவில்லை. விஜய்யிடம் அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.
முன்னதாக புத்தாண்டை கொண்டாட விஜய் வர்மாவுடன் கோவாவுக்கு சென்றார் தமன்னா. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விஜய் வர்மாவும், தமன்னாவும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அதை பார்த்த ரசிகர்களோ விஜய் வர்மாவும், தமன்னாவும் காதலிப்பதாக பேசத் துவங்கினார்கள். ஆனாலும் விஜய்யும், தமன்னாவும் தாங்கள் காதலிப்பதை உடனே ஒப்புக் கொள்ளவில்லை.
காவாலா காவாலானு ஊரையே ஆட வைத்த தமன்னா
இதற்கிடையே காவாலா பாடல் வெளியானதில் இருந்து பலரும் தமன்னாவை சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குட்டிப் பிள்ளை காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ ட்விட்டரில் வெளியானது.
அதை பார்த்த தமன்னா கூறியிருப்பதாவது, இதனால் தான் எனக்கு பாட்டும், டான்ஸும் பிடிக்கும். குழந்தைகளை கூட ஆடச் செய்யும். அவர்களின் ரியாக்ஷனை பார்ப்பதில் சந்தோஷம் என்றார்.
மேலும் காவாலா பாடலுக்கு தமன்னா போட்ட ஸ்டெப்ஸ் ஷகீராவின் பாடலுக்கு பொருந்தியிருக்கிறது. தமன்னா தான் இந்திய ஷகீரா என்று கூறி ஒருவர் வீடியோ வெளியிட்டார். அதை பார்த்த தமன்னாவோ, ஷகீரா பாடலுக்கு தன் ஸ்டெப்ஸ் பொருத்தமாக இருப்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார்.
மேலும் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் இளம் பெண்கள் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பார்த்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தமன்னா.