Jawan: வெளியானது ஜவான் ப்ரிவியூ… ஆக்‌ஷனில் அதிரிபுதிரியாக மாஸ் காட்டும் அட்லீ – ஷாருக்கான் காம்போ!

மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

அட்லீயின் முதல் பாலிவுட் என்ட்ரியான ஜவான் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஜவான் படத்தின் ப்ரிவியூ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் தாறுமாறாக உருவாகியுள்ளது ஜவான் ப்ரிவியூ வீடியோ.

வெளியானது ஜவான் ப்ரிவியூ:கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றுள்ள அட்லீ, முதல் படத்திலேயே ஷாருக்கானுடன் இணைந்தார். அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஜவான் செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, ப்ரியா மணி, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர்.

 Jawan: Shah Rukh Khans Jawan movie Prevue released now

500 கோடி பட்ஜெட்டில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள ஜவான் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் ஜவான் படத்தின் ப்ரிவியூ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான இந்த வீடியோவில், ஷாருக்கான் – அட்லீ காம்போ ஆக்‌ஷனில் வெறித்தனம் காட்டியுள்ளது.

ஜவான் யார் என்ற கேள்வியுடன் ஷாருக்கானின் வாய்ஸ் ஓவரில் தொடங்குகிறது இந்த வீடியோ. அதன்பின்னர் தொடங்கும் ஆக்‌ஷன் வெறியாட்டம், வீடியோவின் இறுதிவரை தாறுமாறாக சம்பவம் செய்கிறது. ஷாருக்கானின் ஆக்‌ஷன் சீன்ஸ் தியேட்டரில் எரிமலையாக வெடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜவான் கிராபிக்ஸ் காட்சிகளும் படு மிரட்டலாக உருவாகியுள்ளது. முக்கியமாக ஷாருக்கானின் கெட்டப் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

 Jawan: Shah Rukh Khans Jawan movie Prevue released now

மாஸ்க்குடன் அறிமுகமாகும் ஷாருக்கான், இறுதியாக மொட்டைத் தலையுடன் செம்ம க்யூட்டாக டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார். ஷாருக்கானின் யுனிக் என்றால் அது அவரின் ஹேர்ஸ்டைல் தான். ஆனால், ஜவானில் அட்லீயின் வேண்டுகோளுக்காக மொட்டைத் தலையுடன் மிரட்டியுள்ளார் ஷாருக்கான். அவரை இப்படியொரு கெட்டப்பில் பார்த்து பாலிவுட் ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

ஜவான் ப்ரிவியூ வீடியோவின் இறுதியில் வரும் வசனமும் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்துள்ளது. “எனக்கு முன்னாடி எந்த ஹீரோவும் நிற்க முடியாது” என ஷாருக்கான் வைத்துள்ள பஞ்ச், பாலிவுட்டையே பதற வைத்துள்ளது. இதேபோல், பதான் படத்திலும் ஷாருக்கானும் சல்மான் கானும் இளம் ஹீரோக்களை கலாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜவான் ப்ரிவியூ வீடியோவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதில், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே ஆகியோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 Jawan: Shah Rukh Khans Jawan movie Prevue released now

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் இந்தப் படம் 1500 கோடி வரை வசூலிக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரியில் வெளியான பதான் திரைப்படமும் ஷாருக்கானுக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஜவான் படமும் தரமான சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இயக்குநர் அட்லீக்கு பாலிவுட்டில் செம்ம மாஸ்ஸான ஓபனிங் கிடைத்துள்ளது.

முன்னதாக ஜவான் படத்தின் ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ ரைட்ஸ் அனைத்தும் சேர்ந்து 250 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாம். ஜவான் தமிழ் தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. அதேபோல், தெலுங்கு தியேட்டர் ரைட்ஸை தில் ராஜூ வாங்கியுள்ளாராம். இதனால் ஜவான் படத்திற்கு தமிழ், தெலுங்கிலும் தரமான ப்ரொமோஷன் இருக்கும் என சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.