காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை இன்று (10) தொடக்கம் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கு அமைச்சர் உரிய அதிகாரிகள் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு அமைய, போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.