சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 10 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ரெனோ 10 சீரிஸ் வரிசையில் மூன்று போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ 10, ரெனோ 10 புரோ, ரெனோ 10 புரோ+ ஆகிய மாடல்கள் தற்போது அறிமுகமாகி உள்ளன.
சிறப்பு அம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 6.74 இன்ச் ஃபுள் ஹெச்.டி+ AMOLED டிஸ்பிளே
- 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- ரெனோ 10 மாடல் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமான்சிட்டி 7050 சிப்செட், 5000mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது
- ரெனோ 10 புரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட், 4600mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது
- ரெனோ 10 புரோ+ மாடலில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 4700mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது
- ரெனோ 10 புரோ மாடல் போன் ரூ.39,999 முதல் தொடங்குகிறது. ரெனோ 10 புரோ+ போனின் விலை ரூ.54,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது
- ரெனோ 10 மாடலின் விலை வரும் 20-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
And here comes the moment we all have been waiting for, get your hands on the best portrait smartphone ever, the #OPPOReno10Pro+ at Rs.54,999 and #OPPOReno10Pro at Rs.39,999 only!
Pre-order now: https://t.co/JvgemU5EzN pic.twitter.com/0MafOP5j58
— OPPO India (@OPPOIndia) July 10, 2023