சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸின் நடிப்பில் உருவாகியுள்ள அநீதி திரைப்படத்தின் அட்டகாசமான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் எம். கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், வசந்த பாலன் தயாரித்துள்ள படம் அநீதி.
இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார், நாடோடிகள்’ பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர்.
அநீதி: வெயில், அங்காடித்தெரு, அரவாண், காவியத்தலைவன்,’ ஜெயில் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் அடுத்ததாக அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் பேசிய வனிதா விஜயகுமார், அநீதி படத்தில் காட்சிக்கு காட்சி ட்வீஸ்ட் இருப்பதாக கூறினார். மேலும், படத்தில் அர்ஜூன் தாஸின் அருமையாக இருந்தது என்று கூறினார். மேலும், அர்ஜூன் தாஸ் தமிழ் சினிமாவின் ஷாருக்கான் என்று புகழ்ந்தார்.
யதார்த்தமாக படம்: இதையடுத்து பேசிய இயக்குநர் ஷங்கர், அநீதி படம் யதார்த்தமாகவும் த்ரில்லராகவும் புது கலவையாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று உழைக்கும் வர்க்கத்துக்காக ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார் வசந்தபாலன் என்றார்.
மிரட்டலான டிரைலர்: இந்நிலையில் அநீதி திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியாகி உள்ளது, டிரைலரில் அர்ஜூன் தாஸ் போதை,சரக்கு,பீடி என சும்மா சம்பவம் செய்து இருக்கிறார். காட்சிக்கு காட்சி திகிலூட்டும் ட்வீஸ்டன் டிரைலர் தெறியாக இருக்கிறது. முகத்தில் ரத்தம் வழிந்து ஓட டிரைலரை பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கிறது. சற்று முன் வெளியாகி உள்ள இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.இப்படம் ஜூலை 21-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.