சென்னை:
“ஆளுநர் ஆர்.என். ரவி பேசுவதை பார்த்தால் யாருக்காவது மரியாதை கொடுக்க தோன்றுமா?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்
கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. முக்கிய கோப்புகளை கிடப்பில் போடுதல், திமுகவின் கொள்கைகளை விமர்சித்தல், பாஜக தூக்கிப்பிடிக்கும் சனாதன தர்மத்திற்காக பிரச்சாரம் செய்தல் என ஆளுநர் தனது செயல்பாடுகளை தொடர்ந்ததால், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.
இதனிடையே, ஆளுநருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு ஆளுநருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை திமுகவினர் கொடுப்பதில்லை என அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது:
கிறிஸ்தவ மதபோதகர் வீடியோ.. “பெண்ணுடன் டான்ஸ்”.. சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் அதிரடி கைது!
ஆளுநருக்கு மதிப்பு கொடுக்கலைனு சொல்லக்கூடாது. மதிக்கும்படியாக அவர் நடந்திருக்க வேண்டும். நீங்க (ஆளுநர்) நடந்துக்குறத வெச்சுதான் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் வரும். ஆளுநர் அப்படி ஒரு இடத்துல கூட நடந்துக்கலையே. எதையாவது ஒன்றை உருப்படியா பேசி இருக்கிறாரா? 10 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவில் சனாதன தர்மம் இருந்ததா பேசுறாரு. அதுமட்டுமா.. சனாதன தர்மத்துக்கு உச்ச நட்சத்திரமே வள்ளலார்னு சொல்றாரு. 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்னாடி இந்தியானு ஒரு நாடு இருந்துச்சா? இந்தியாவே இல்லாத போது சனாதனம்னு ஒன்னு எப்படி வந்திருக்கும்?
3000 ஆண்டுக்கு முன்புதான் சாதியின் அடிப்படையில் வர்ணாஸ்ரமம் கொள்கையை கற்பிக்கிற சனாதனம் வந்ததா அம்பேத்கர் சொல்றாரு. இந்த சனாதனத்தை எதிர்த்தே சுத்த சன்மார்க்கம் என்ற கோட்பாட்டை வள்ளலார் உருவாக்குறாரு. அப்படிப்பட்ட ஒருவரை சனாதனத்தின் நட்சத்திரம்னு சொன்னா உங்களை என்னன்னு நாங்க நினைக்கிறது. “ரொம்ப முத்திருச்சு. எந்த வைத்தியம் பண்ணாலும் இத சரி பண்ண முடியாது” என்றுதான் நினைக்க முடியும். அப்போ எப்படி மரியாதை வரும்? என சீமான் கூறினார்.