மும்பை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ப்ரிவியூ வீடியோ இன்று காலை வெளியானது.
ஷாருக்கான் – அட்லீ – அனிருத் காம்போவில் உருவான இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அதேநேரம் இதில் சில காப்பி கட் சீன்ஸ் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்யத் தொடங்கிவிட்டனர்.
வழக்கம்போல அட்லீ பழைய பன்னீர் செல்வமாக மாறி தனது வேலையை காட்டிவிட்டார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.
பழைய பன்னீர் செல்வமாக மாறிய அட்லீ:இதுவரை கோலிவுட்டில் சம்பவங்கள் செய்துவந்த அட்லீ, முதன்முறையாக பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுடன் இணைந்த அட்லீ, தற்போது ஜவான் படத்தை முழுவதுமாக முடித்துவிட்டார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ஜவான் தற்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. அதன்படி இந்தப் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகிறது.
இதனையடுத்து அப்டேட்டுக்காக காத்திருந்த ஷாருக்கான் ரசிகர்களுக்கு ஜவான் ப்ரிவியூ வீடியோவை வெளியிட்டது படக்குழு. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான இந்த வீடியோவில் ஷாருக்கானின் ஆக்ஷன் மிரட்டலாக உள்ளது. ஸ்டைலிஷ், மாஸ், வெறித்தனம் என ஷாருக்கானை செதுக்கியுள்ளார் அட்லீ. ஆனாலும் இதில் சில காட்சிகள் காப்பி கட் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
முகத்தில் பாதி மஸ்க் உடன் இருக்கும் ஷாருக்கானின் லுக், அந்நியன் விக்ரம் போல இருப்பதாக ட்ரோல் செய்துள்ளனர். அதேபோல், பாகுபலி படத்தில் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன் ஒற்றை கையில் குழந்தையை தூக்கி ஜெய் மகிழ்மதி என முழங்குவார். அதேபோன்ற ஒரு காட்சியும் ஜவான் கிளிம்ப்ஸில் உள்ளது. இன்னொரு சீனில் டார்க் நைட் படத்தின் காட்சியை காப்பி பேஸ்ட் செய்துள்ளார் அட்லீ.
அதேபோல், கதையாக பார்த்தாலும் அம்மாவின் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு வில்லனை பழிவாங்கும் ஹீரோ என அதே பழைய உருட்டு தான் எனவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக பிளாஷ்பேக் காட்சியில் தான் தீபிகா படுகோன் வருவார் எனவும், அவரையும் வழக்கம் போல அட்லீ ஒருசில காட்சிகளிலேயே கொன்றுவிடுவார் எனவும் கூறி வருகின்றனர். ஆகமொத்தம் பாலிவுட்டிலும் அட்லீ பழைய பன்னீர் செல்வமாக தான் களமிறங்கியுள்ளார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. அனிருத்துக்கும் ஜவான் தான் பாலிவுட்டில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானுடன் நயன், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, ப்ரியா மணி உள்ளிட்டோர் ஜவான் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 1500 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.