2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப்பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர்; மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், இந்த (2023) வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. தாமதமான அனைத்துப் பரீட்சைகளையும் 2024 ஆம் ஆண்டுக்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.