தமிழில் ‘ரன்’ படத்தின் மூலம் அறிமுமாகி பின் ‘சண்டக்கோழி’, ‘ஆயுத எழுத்து’ போன்ற படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மீன்.
அதனைத்தொடர்ந்து மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த அவர் 2014-க்குப் பிறகு படங்களில் நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் தற்போது இயக்குநர் சசிகாந்த் இயக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/meera_jasmine_in_golden_colour_saree_with_matching_blouse_003.jpg)
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த மீரா ஜாஸ்மீன், “நான் ஏற்கனவே மாதவன், சித்தார்த் ஆகியோருடன் நடித்துள்ளேன். தற்போது நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன். எனது பயணம் சிறப்பான ஒன்றாகவே இதுவரை இருந்திருக்கிறது. சில ஆண்டுகாலம் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நடிப்பதில் இருந்து விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்கத் துவங்கி இருக்கிறேன்.
அதனால் எனது பயணம் மீண்டும் ஆரம்பமாவது போல் இருக்கிறது. சமூக வலைதளங்களில் என்னுடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் பாஸிட்டிவாக பதிலளிப்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.