தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்?
நடிகர் தனுஷ் ‛கேப்டன் மில்லர்' படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக அறிவித்தனர். சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்ட அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷின் அண்ணன் மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஒரு பேட்டியில் தனுஷ் 50வது படத்தில் ஒரு நல்ல ரோல் உள்ளது. அதில் நான் தான் நடிப்பேன் என்று தனுஷிடம் கேட்டுள்ளதாக செல்வராகவன் கூறியிருந்தார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.