Norton Combat – ராயல் என்ஃபீல்டுக்கு மற்றொரு சவால் நார்டன் காம்பெட் பைக்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நார்டன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் காம்பெட் என்ற பெயருக்கான காப்புரிமை கோரியுள்ளது. இங்கிலாந்தின் ஐகானிக் பிராண்டுகளில் ஒன்றாக நார்டன் மோட்டார்சைக்கிள் விளங்குகின்றது.

டிவிஎஸ் வெளியிட்டிருந்த ரோனின் ரோட்ஸ்டெர் ஸ்டைல் மாடல் பெரிய அளவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு ஈடுகொடுக்காத நிலையில் நார்டன் பிராண்டில் மாடலை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Nortan Combat

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஹோண்டா, ஜாவா, யெஸ்டி உள்ளிட்ட நிறுவனங்களுடன் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் ஸ்பீட் மற்றும் ஸ்கிராம்பளர் வந்துள்ளது. அடுத்து, ஹீரோ-ஹார்லி கூட்டணியில் எக்ஸ் 440 விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த வரிசையில், இணைய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 500cc க்கு குறைவான திறன் கொண்ட நார்டன் காம்பட் பைக் மாடலை ரெட்ரோ ஸ்டைலில் உருவாக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்நிறுவனம் நார்டன் கமாண்டோ 961 மற்றும் V4SV, V4CR போன்றவற்றை விற்பனை செய்யும் நிலையில், எலக்ட்ரிக் பைக் மாடலையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. நார்டன் காம்பெட் வருகை குறித்து தற்பொழுது எந்த உறுதியான தகவலும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.