இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV எலக்ட்ரிக் காரில் Level 2 ADAS பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு ₹ 27.89 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
17 விதமான பிரத்தியேகமான இரண்டாம் கட்ட ADAS உடன் கூடிய புதிய, டாப் இசட்எஸ் எக்ஸ்குளூசிவ் புரோ வேரியண்ட் ஆனது எக்ஸ்குளூசிவ் வேரியண்ட்டை விட ரூ. 50,000 வரை கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
MG ZS EV
50.3kWh பேட்டரி பேக்குடன் வந்துள்ளது. இதன் பெரிய பேட்டரியின் காரணமாக 461km (ICAT சோதனையின் படி) ZS EV மின்சார கார் அதிகபட்சமாக 176hp மற்றும் 353Nm டார்க் உற்பத்தி செய்யும் முன்புறம் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
ZS EV மின்சார காரில் சேர்க்கப்பட்டுள்ள ADAS ஆனது குறைந்த, நடுத்தர மற்றும் அதிக உணர்திறன் மூன்று நிலைகளில் வேலை செய்யும், மேலும், ஹாப்டிக், ஆடியோ மற்றும் விஷுவல் ஆகிய மூன்று எச்சரிக்கை அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
போக்குவரத்து நெரிசல் உதவி (TJA), முன்னோக்கி மோதலை தவிர்க்க எச்சரிக்கை (FCW), வேக உதவி அமைப்பு (SAS) மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (ACC) ஆகியவை அடங்கும். இந்த EV காரில் டிஜிட்டல் கீ, 10.11 இன்ச் HD தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் பேன் பனோரமிக் ஸ்கை ரூஃப், பின் பார்க்கிங் சென்சார் கொண்ட 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன், 6 காற்றுப்பை ஹில் டிசென்ட் கண்ட்ரோல் (HDC) போன்ற பிற அம்சங்களையும் பெறுகிறது.
எம்ஜி ZS EV 23.38 லட்சம் விலையில் விற்பனைக்கு தொடங்குகிறது