நடிகர்களுடன் செம நெருக்கம்.. ஏகப்பட்ட வாய்ப்புகளை அள்ளும் பிரபல தொகுப்பாளினி.. ஓ அதுதான் விஷயமா?

சென்னை: சமீப காலமாக பிரபல தொகுப்பாளினி ஒருவரை எந்த திரைப்பட நிகழ்ச்சிக்கு சென்றாலும் பார்க்க முடிகிறதே என்ன காரணம் என்று விசாரித்தால் அவர் பல இளம் நடிகர்களுடன் நல்ல நெருக்கமான உறவில் உள்ளார் என்கின்றனர்.

அழகான குரலால் ரசிகர்களை கட்டிப் போடும் திறமை கொண்ட அந்த தொகுப்பாளினி கை வசம் தான் பணமழை குவிந்து வருவதாக சக தொகுப்பாளினிகளே பயங்கர பொறாமையில் பொங்கி வருகின்றனர்.

ரீல்ஸ் வீடியோக்களில் ஆட்டம் போடுவது, பேசியே ரசிகர்களை அதிகம் மயக்குவது என அந்த தொகுப்பாளினியிடம் ஏகப்பட்ட தனித்திறமைகள் உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

குவியும் வாய்ப்புகள்: பல இளம் ஹீரோக்களின் சமீபத்திய பட விழாக்களில் அந்த தொகுப்பாளினி தான் நடு நாயகமாக திகழ்கிறார் என்றும் தொடர்ந்து மற்ற தொகுப்பாளினிகளை ஓவர்டேக் செய்து விட்டு பல்வேறு நிகழ்ச்சிகளையும் தன் வசம் ஆக்கி வருகிறார் அந்த பிரபல தொகுப்பாளினி என சக தொகுப்பாளினிகளே ஒரு மாதிரியாக புலம்பி வருகின்றனர்.

சின்னத்திரையில் ஷோ பண்ணினால் கூட கிடைக்காத சம்பளம் இப்படி சினிமா விழாக்களை தொகுத்து வழங்கினால் உடனடியாகவும் அதிகளவிலும் கிடைத்து வருவதாக கூறுகின்றனர். அதனால், அந்த தொகுப்பாளினி அதையே டார்கெட் செய்து எல்லா திரைப்பட விழாக்களையும் தன் வசமாக்கி வருகிறார் என்கின்றனர்.

நடிகர்களுடன் நெருக்கம்: ஒவ்வொரு சினிமா விழாவிலும் ஒரு தொகுப்பாளினி நிகழ்ச்சியை நடத்தலாமே, எப்படி அந்த குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் அடுத்தடுத்து பல படங்களை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்கிறது என கிளம்பிய கேள்விகளுக்கு பதிலாக அந்த தொகுப்பாளினி பல இளம் நடிகர்களுடன் நல்ல நட்பு வட்டத்தில் நெருக்கமாக இருக்கிறார் என்றும் எவ்வளவு நேரம் நிகழ்ச்சி நடந்தாலும் சிரித்த முகத்துடனே அந்த நிகழ்ச்சியை அவர் நடத்திக் கொடுப்பதால் தான் அவரையே புக் செய்கின்றனர் என்கின்றனர்.

மேலும், குறிப்பிட்ட சேனல் ஒன்றில் இருக்கும் போதே சில இளம் நடிகர்களுடன் ஏற்பட்ட நட்பு காரணமாகத்தான் அவருக்கு இப்படி வாய்ப்புகள் வரிசையாக வந்து குவிவதாகவும் தொடர்ந்து அந்த ஒரு தொகுப்பாளினிக்கு மட்டுமே பெரிய படங்களின் நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பு கிடைத்து வருவதால் மற்ற தொகுப்பாளினிகள் பொறாமையில் உள்ளதாகவும் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.