கேரளாவில் கனமழை : தள்ளிப்போன திலீப் படம் ; தாக்குப்பிடிக்குமா மாவீரன் ?
கேரளாவில் தற்போது பருவமழை சீசன் என்பதால் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல படங்கள் தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த வாரம் (ஜூலை-7) வெளியாக வேண்டிய குஞ்சாக்கோ போபன், அபர்ணா பாலமுரளி நடித்த பத்மினி என்கிற படம் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் ஜூலை 14ல் வெளியாக இருந்த திலீப் நடித்த வாய்ஸ் ஆப் சத்யநாதன் என்கிற திரைப்படம் வரும் ஜூலை 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படமும் ஜூலை 14ல் தான் கேரளாவில் வெளியாகிறது. சமீபத்தில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி கூட கேரளாவில் நடைபெற்றது. கனமழை காரணமாக தியேட்டர்களுக்கு மக்கள் கூட்டம் வராது என்று தான் நடிகர் திலீப்பின் படமே ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் இந்த மழைக்கு கேரளாவில் தாக்கு பிடித்து நிற்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.