Tesla – ரூ. 20 லட்சத்தில் டெஸ்லா எலக்ட்ரிக் காரை வெளியிடும் எலான் மஸ்க்

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தயாரிக்க தொழிற்சாலையை அமைக்க டெஸ்லா முடிவெடுத்துள்ள நிலையில் ரூ. 20 லட்சம் ஆரம்ப விலையில் எலக்ட்ரிக் காரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கார் தொழிற்சாலையை நிறுவுவதற்கான முதலீட்டுத் திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்துடன் விவாதங்களைத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக  ஆலையின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 5,00,000 கார்களாகும்.

Tesla India

மிகவும் கடும் சவால் நிறைந்த இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபடுவதற்கான முதற்கட்ட முதலீடு திட்டங்களை செயல்படுத்த எலான் மஸ்க் தீவரமாக உள்ள நிலையில், இந்திய சந்தைக்கான மாடல்கள் மற்றும் இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதால், இந்தியாவை ஏற்றுமதி தளமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் டெஸ்லா திட்டமிட்டு வருகின்றது.

அடுத்த சில மாதங்களில் டெஸ்லா தொழிற்சாலை துவங்குவதற்கான முதற்கட்ட அறிவிப்பு வெளியாகலாம்.  வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தலைமையில் டெஸ்லா நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் டெஸ்லா எலக்ட்ரிக் கார் ரூ.20 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டால் அமோக வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உதவி – TOI

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.