சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த வாரம் வெளியானது.
அனிருத் இசையில் காவாலா என்ற டைட்டிலில் உருவான இந்தப் பாடலில் தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட் இன்று (ஜூலை 13) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
இப்பாடலிலும் சூப்பர் ஸ்டாருக்குப் பதிலாக தமன்னா டான்ஸ் வேண்டும் என ரஜினி ரசிகர்கள் அடம்பிடித்து வருகின்றனர்.
தலைவர் வேண்டாம்… தமன்னா போதும்…:சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதிய ‘காவாலா’ என்ற இந்தப் பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டிருந்தார். ஷில்பா ராவ்வின் ஹஸ்க்கியான குரலும் தமன்னாவின் கிளாமர் ஆட்டமும் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்தது.
வழக்கமாக ரஜினியின் படங்களில் இருந்து அவரது இன்ட்ரோ சாங் தான் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும். ஆனால், ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமன்னா பாட்டு என அப்டேட் வெளியானபோது, சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஆனால், காவாலா பாடலில் தமன்னாவின் ஆட்டத்தில் கிறங்கிய தலைவர் ரசிகர்கள், இந்தப் பாடலுக்காகவே ஜெயிலர் படம் பார்க்கலாம் என முடிவு செய்துவிட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு ஜெயிலர் செகண்ட் சிங்கிள் அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சூப்பர் ஸ்டார் சம்பவம் லோடிங் என்ற கேப்ஷனுடன் ரஜினியின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் செகண்ட் சிங்கிளில் தலைவர் இல்லையென்றாலும் பராவயில்லை, தமன்னா கண்டிப்பாக வேண்டும் என அடம் பிடித்து வருகின்றனர்.
ஜெயிலர் செகண்ட் சிங்கிளிலும் தமன்னாவின் ஆட்டத்தை ரசிக்க தவம் இருப்பதாக அவர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஒரே பாடலில் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களை வளைத்துப் போட்ட தமன்னா, ஜெயிலர் படத்தில் என்ன மாதிரியான சம்பவங்கள் செய்திருப்பாரோ என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.