முதல் போட்டியிலிருந்தே தானும், அணியும் போட்டிக்கு போட்டித் திட்டங்களைத் தயாரித்து போட்டியிடக் காத்திருப்பதாக இலங்கை ‘ஏ’ அணியின் தலைவர் துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார்.
ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று (12) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே துனித் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது துனித் மேலும் தனது கருத்துகளை தெரிவிக்கையில், ‘உண்மையைச் சொல்வதென்றால், எனக்கு இதுபோன்ற வாய்ப்பை வழங்கிய கிரிக்கெட் சபைக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். மேலும், எனக்கு ஒரு நல்ல சமநிலையான அணி கிடைத்துள்ளது. அவர்களில் பல அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். இது மிகவும் எளிதானது. இவ்வாறானதொரு அணியை நான் வழிநடத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.