வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரீஸ்: இந்தியா – பிரான்ஸ் இடையிலான நட்புறவானது பல மாற்றங்களை சந்தித்து உள்ளது. இதன் மூலம் புவிசார் அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரான்ஸ் தேசிய தின கொண்டாடட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று, பிரதமர் மோடி பிரான்ஸ் கிளம்பி சென்றுள்ளார்.
இதனை முன்னிட்டு, பிரான்ஸ் நாளிதழுக்கு நரேந்திர மோடி அளித்த சிறப்பு பேட்டி: பிரான்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்ததற்காக பிரான்ஸ் அரசுக்கும் மற்றும் அதிபர் மேக்ரானுக்கும், 140 கோடி இந்தியர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இருநாடுகளுக்கு இடையிலான உறவு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள இந்த ஆண்டு மிகவும் சிறப்பானது. இந்தியா பிரான்ஸ் நட்புறவில் நட்புறவு பெருமை அளிக்கிறது.
இந்தியாவுடன் மேற்கத்திய நாடுகள் நட்புறவை வளர்க்க தயங்கிய போது, பிரான்ஸ் தான் முதல்முறையாக பிராந்திய ரீதியில் உறவை வளர்த்தது. அந்த காலகட்டம், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கடினமானதாக இருந்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாற்றம் அடைந்து உள்ளது. இந்த உறவானது இரு நாடுகளுக்கு மட்டும் முக்கியம் அல்ல. புவிசார் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பிரான்ஸ் உறவானது வலுவாக உள்ளது. அது வலுவானதாகவும், நம்பகமானதாகவும் மற்றும் நிலையானதாகவும் உள்ளது.
கடின காலங்களில் நிலையானதாகவும், பிரச்னைகள் ஏற்பட்டால் அதில் இருந்து மீளும் வகையிலும் உள்ளது. வாய்ப்புகளை தேடுவதில், தைரியமானதாகவும் மற்றும் லட்சியமானதாகவும் உள்ளது.
இந்தோ பசுபிக் பிராந்தியத்தில், இந்தியா பிரான்ஸ் இடையிலான உறவானது, வேறு எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல. பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பது மற்றும் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்வதுடன் அந்த பகுதியை சர்வதேச சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதே நோக்கம் ஆகும். இவ்வாறு அந்த பேட்டியில் மோடி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement