ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் திடீர் சந்திப்பு… என்ன காரணம்?

ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக பதவியேற்று கொண்டதில் இருந்து சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் நடக்கும் விஷயங்களை டெல்லிக்கு சென்று முறையிடுவதும், டெல்லியின் கட்டளைகளை தமிழகத்தில் அரங்கேற்றுவதும் என அரசியல் பரபரப்பிற்கு சிறிதும் பஞ்சமில்லை என அரசியல் பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.

ராஜ் பவன் ஆர்.என்.ரவியே எங்கள் அமைச்சரை நீக்க நீ யார்?

செந்தில் பாலாஜி பஞ்சாயத்து

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடைசி அரசியல் பஞ்சாயத்து என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் தலையிட்டது தான். செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை ரெய்டு, கைது என அதிரி புதிரி சம்பவங்கள் அரங்கேறின. இருப்பினும் இலாகா இல்லாத அமைச்சராக தொடர முதலமைச்சர்

நடவடிக்கை எடுத்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

இதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, உடனே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு ஆளுநருக்கு சில அறிவுரைகள் வழங்கினார். அதன்பேரில் அடுத்த சில மணி நேரங்களில் உத்தரவை திரும்பப் பெற்றார்.

அமித் ஷா போட்ட ஆர்டர்

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்து விட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க அமித் ஷா அறிவுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசினார். மொத்தம் 5 நாட்கள் டெல்லியில் தங்கியிருந்தார்.

சிவ்தாஸ் மீனா சந்திப்பு

பின்னர் தமிழகம் திரும்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இன்று காலை சுமார் 30 நிமிடங்கள் வரை சந்திப்பு நடந்துள்ளது. இவர்கள் இருவருமே வட மாநிலத்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. டெல்லியில் அரசியல் லாபி செய்த நிகழ்வுகளும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அந்த இரண்டு விஷயங்கள்

எனவே பழைய விஷயங்கள் பலவற்றை பேசியிருக்க வாய்ப்புண்டு. அதேசமயம் ராஜ்பவன் வட்டாரத்தில் விசாரிக்கையில், இரண்டு விஷயங்களை முன்வைத்தனர். ஒன்று, தமிழக அரசின் துறை ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? இரண்டாவது மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது?

தமிழக ரிப்போர்ட்

என இரண்டு விஷயங்கள் குறித்து கேட்டறிந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறினர். டெல்லியில் இருந்து வந்ததும் இந்த சந்திப்பு நடந்திருப்பது, நிச்சயம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வாக இருக்கலாம் எனத் தெரிகிறது. உடனடியாக தமிழக நிலவரம் குறித்து ஒரு ரிப்போர்ட் வேண்டும் என்று டெல்லி ஆர்டர் போட்டிருக்கலாம்.

அடுத்து சங்கர் ஜிவால்

அதற்காக முதலில் தலைமை செயலாளர் வரவழைக்கப் பட்டிருக்கலாம். அடுத்தகட்டமாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஐபிஎஸ்சை அழைத்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டறியக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.