இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி தெவி குஸ்டினா டோபிங் மற்றும் இலங்கை இந்தோனேசிய தூதரகத்தின் அமைச்சு ஆலோசகர் திரு.ஹெரு பிரயித்னோ இருவரும் இராணுவத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தளபதி அலுவலகத்தில் (11) சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது பொது விடயங்கள் மற்றும் இராணுவத்தின் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் நீண்டகால பிணைப்புகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர்.
சிநேகபூர்வ சந்திப்பின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இந்தோனேசியாவின் தூதுவர் நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் பேரின் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.