ஜவானில் ராஜகுமாரியின் பாடல்
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க ராப் பாடகி ராஜகுமாரி. இந்திய மற்றும் சர்வதேச இசை உலகில் புகழ்பெற்றவர். பாலிவுட்டின் பிரபலமான சில நட்சத்திர நடிகர்களுக்கு தனது தனித்துவமான குரலையும் வழங்கி இருக்கிறார். பல சர்வதேச கலைஞர்களுடன் பணியாற்றி உள்ளார். கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகிகளில் முக்கியமானர். தற்போது ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி நடிப்பில் அட்லி இயக்கதில் உருவாகி உள்ள 'ஜவான்' படத்தில் ராஜா குமாரி எழுதி, பாடி, ஆடிய 'கிங் கான்' ராப் ட்ராக், இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ராஜா குமாரி சமூக ஊடகங்களில் ''தலைப்பு பாடலை எழுதவும், நடிக்கவும் என்னை அழைத்த அனிருத் மற்றும் ஷாருக்கானுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.