கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்களை ஒதுக்குதல், படித்த மகளீர் திட்ட காணி விவகாரம், கரும்புத் தோட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.