சென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) நடிகை சிம்ரனின் இடுப்பை தனக்கு ரொம்ப பிடிக்கும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.
மானாட மயிலாட நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆன பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிறகு பா.இரஞ்சித் இயக்குநராக அறிமுகமான அட்டகத்தி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். படம் ஹிட்டானதை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷும் திரையுலகில் பிரபலமானார்.
முன்னணி நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் சினிமாவில் வளர்ந்துகொண்டிருக்கும் சமயத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க எந்த ஹீரோயின் முன்வரமாட்டார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அதனை செய்து காண்பித்தார். அதில் அவரிடமிருந்து பக்குவப்பட்ட நடிப்பு வெளிவந்தது.
வருத்தப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்: அந்தப் படத்துக்கு பிறகு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என நினைத்திருந்த ஐஸ்வர்யா கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் சும்மாவே இருந்தார். இதுகுறித்தும் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் காக்கா முட்டை படத்தில் நடித்த பின்பு மொத்த திரையுலகமும் என்னை தொடர்பு கொண்டு பாராட்டியது. நிறைய பேர் புகழ்ந்தார்கள். ஆனால், அதன் பிறகு எனக்கு எந்த பட வாய்ப்புகள் வரவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்காமல் சும்மாவே இருந்தேன் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னணி நடிகை: அதற்கு பிறகு ஒருவழியாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க தர்மதுரை, குற்றமே தண்டனை, லட்சுமி, வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். முக்கியமாக வடசென்னை படம் அவருக்கு பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. தற்போது அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா, ஃபர்ஹானா ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இவற்றில் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டாகவில்லை.
சிம்ரனின் இடுப்பை பிடிக்கும்: இந்நிலையில் சிம்ரனின் இடுப்பை தனக்கு மிகவும் பிடிக்கும் என பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். பேட்டி ஒன்றில் பேசிய அவர், “எனக்கு சிம்ரனின் இடுப்பு மிகவும் பிடிக்கும், நானும் அவரை ரசித்திருக்கிறேன். இதில் யோசிக்க ஒன்றும் இல்லை. கவர்ச்சி என்பது தவறே கிடையாது. உடையில், அழகில் இல்லை கவர்ச்சி. ஒருவர் மற்றொருவரை பார்க்கும்போது அவர்கள் முகம் சுளிக்கும்படியாக மட்டும் இருக்கக் கூடாது” என்றார்.