மும்பை: தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் முன்னணி நாயகியாக மாறியுள்ளார் சமந்தா.
முன்னதாக இவரது நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 சீரிஸில் நடித்ததன்மூலம் பான் இந்தியா நாயகியாக மாறியுள்ளார் சமந்தா.
இந்த தொடரை தொடர்ந்து தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல் இந்திய வெர்ஷனில் நடித்துள்ளார் சமந்தா. இதில் வருண் தவான் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
சிட்டாடல் வெப் தொடர் சூட்டிங்கை நிறைவு செய்த சமந்தா: நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமின்றி இந்தியில் சிறப்பான நாயகியாக மாறியுள்ளார். தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள சமந்தா, இந்தியில் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 தொடரில் நடித்து நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தார். தொடர்ந்து இவர் பான் இந்தியா நாயகியாக மாறியுள்ளார்.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து முடித்துள்ளார் சமந்தா. இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வியூஸ்களையும் பெற்றுள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாத வெளியீடாக ரிலீசாகவுள்ள நிலையில், படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இவர்கள் முன்னதாகவே படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த ஜோடி மீண்டும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சிட்டாடல் இந்திய வெர்ஷனில் நடித்துள்ளார் சமந்தா. சிட்டாடல் தொடரில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள நிலையில், அதன் பிரீமியரில் சமந்தாவும் நாயகன் வருண் தவானும் பங்கேற்று ட்ரெண்டிங்கில் இருந்தனர். இந்நிலையில் தற்போது சிட்டாடல் தொடரின் இந்திய வர்ஷனின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் நடிகை சமந்தா அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகேவுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய கடினமான நேரங்களை சிறப்பாக எதிர்கொள்ள காரணமாக இருந்த இந்த டீமிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா. மேலும் தன்னுடைய லைஃப்டைம் கேரக்டரை தனக்கு கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்த சமந்தா, அடுத்ததாக தனக்காக இவர்கள் சிறப்பான கேரக்டரை உருவாக்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பிற்காக அடுத்த 6 மாத காலங்கள் சமந்தா சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி அடுத்த ஒரு வருடத்திற்கு சமந்தா படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள குஷி படத்தின் ப்ரமோஷன்களிலும் சமந்தா பங்கேற்பது சந்தேகம் தான் என்றும் தற்போது கூறப்பட்டுள்ளது. முன்னதாக யசோதா மற்றும் சகுந்தலா படங்களின் ப்ரமோஷன்களில் மிகவும் சறிப்பாக பங்கேற்றார் சமந்தா. தன்னுடைய நோய் குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் சமந்தா, இந்தப் படங்களின் பிரமோஷன்களில் கலந்துக் கொண்டார்.