Vishal – விஷாலுக்காக களமிறங்கிய டி.ராஜேந்தர் – ட்ரெண்டிங் வீடியோ

சென்னை: Vishal (விஷால்) மார்க் ஆண்டனி படத்தில் டி.ராஜேந்தர் பாடல் பாடும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார். செல்லமே படம் ஓரளவு வெற்றி பெற்று படவாய்ப்புகள் அமைந்தன.

சண்டக்கோழி: அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்தான் முதலில் நடிக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்த பலரும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருவார் என ஆரூடம் கூறினார்.. அதேபோல் அவர் நடித்த தாமிரபரணி, திமிரு உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்தன.

ஹிட்டுக்காக ஏங்கும் நடிகர் விஷால்: ஆனால் சமீபமாக ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் எந்தப் படமும் ரசிகர்களை கவராததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக உழைத்துவருகிறார் அவர். சமீபத்தில் நடித்த லத்தி படமும் அவருக்கு மோசமான தோல்வியையே கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி: இந்நிலையில் அவர் ஆதிக் ரவிச்சதிரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.. இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு 33ஆவது படமாகும். இப்படத்தில் செல்வராகவனும் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் மூலமாவது விஷாலுக்கு வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

T.Rajendar Sang a song in Vishals Mark Antony Movie

மார்க் ஆண்டனி டீசர்: இதற்கிடையே மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வெளியானது. மார்க் ஆண்டனி படமானது டைம் ட்ராவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் விஷால் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. ரெட்ரோ கால கதைக்களம் போல் தெரியும் மார்க் ஆண்டனியில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என டீசரை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி செல்வராகவனும், எஸ்.ஜே.சூர்யாவும் நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர்.

டி.ராஜேந்தர்: இந்நிலையில் அதிருதா… நெஞ்சம் அதிரனும் மாமே என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது . அப்பாடலை டி.ராஜேந்தர் அவரது ஸ்டைலில் பாடியிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பாடலானது ஜூலை 15ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.