தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிரீன் தமிழ்நாடு மிஷன் (Green Tamil Nadu Mission) என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்மூலம் மாநிலத்தில் உள்ள 23.7 சதவீத வனப்பகுதியை 33 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அடுத்த 10 ஆண்டுகள் கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கிரீன் தமிழ்நாடு மிஷன்இதையொட்டி www.greentnmission.com என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நட்டு அதை சரியான முறையில் பராமரித்து செடியாக, மரமாக வளர்த்தெடுப்பது முக்கியமான செயல்பாடாக பார்க்கப்படுகிறது. மேலும் விதைகளை ஆன்லைனில் வாயிலாக வாங்கி விதைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் தகவல்இதற்காக மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டத்தில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டத்தில் பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்தி சிறப்பான முறையில் முன்னெடுத்து செல்லப்படும் என்று மாநில அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ ஐஏஎஸ் கூறியுள்ளார்.
வன நர்சரிகள் – பள்ளிகள் இணைப்புஇதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்களையும் ஈடுபடுத்த வைப்பதே எங்கள் நோக்கம். இதற்காக வன நர்சரிகளை (Forest nurseries) அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்க மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுப்ரியா சாஹூ ட்விட்டர் பதிவுபள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புஇது பள்ளி மாணவர்கள் அனைவரும் நர்சரிகளுக்கு நேரில் சென்று பல்வேறு தாவர இனங்கள் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். அதுமட்டுமின்றி விதைப் பைகளை தயார் செய்யவும், மரக்கன்றுகளை நடவும் சிறப்பான சூழலை ஏற்படுத்தி தரும். இப்படியான நடவடிக்கைகள் இளைய சமூகத்தை பசுமையான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்ல உத்வேகப்படுத்தும் எனப் பதிவிட்டுள்ளார்.
மரக்கன்றுகள் தயார்வனத்துறையின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கிரீன் தமிழ்நாடு மிஷன் திட்டத்திற்காக ஏற்கனவே 2.80 கோடி மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டன. இதற்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் வன நர்சரிகள் ஆகியவற்றின் பங்களிப்பும் பெறப்பட்டது.
ஜியோ டேக் தொழில்நுட்ப வசதிஇதில் அரிய வகை தாவர இனங்களும் இடம்பெற வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் மரக்கன்றுகளை நடுவதற்கு சரியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜியோ டேக் முறையில் கண்காணித்து நல்ல முறையில் வளர்த்தெடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.