![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/1689285493_NTLRG_20230713183023167329.jpg)
நயன்தாராவிடம் உஷாராக இருங்கள் : எச்சரித்த ஷாரூக்கான்
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள ஹிந்தி படம் ஜவான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் நயன்தாரா ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருப்பது தெரியவந்தது. இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன்.
அதையடுத்து அவருக்கு ஷாரூக்கான் அளித்த பதிலில், உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. நயன்தாரா அருமையானவர். ஆனால் அவர் தற்போது உதைப்பதற்கும் கற்றுக் கொண்டுள்ளார். அதனால் அவரிடத்தில் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். ஏற்கனவே இது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு விக்னேஷ்சிவன் ஒரு பதில் கொடுத்து இருக்கிறார். ‛‛நீங்கள் சொல்வது உண்மைதான். நான் நயன்தாரா விஷயத்தில் எச்சரிக்கையாகவே இருந்து வருகிறேன். அதே நேரத்தில் காதல் மன்னனிடம் இருந்து அவர் நல்ல ரொமான்ஸ் செய்யவும் கற்றுக் கொண்டார்'' என்று தெரிவித்திருக்கிறார்.