Sivakarthikeyan – மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன்.. போதையில் மிஷ்கின் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) இயக்குநர் மிஷ்கின் முழு போதையில் சிவகார்த்திகேயனிடம் சொன்ன விஷயம் தெரிய வந்திருக்கிறது.

சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். பிறகு தொகுப்பாளராக மாறி இப்போது ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். ஹீரோ என்றால் சாதாரண ஹீரோ இல்லை நூறு கோடி ரூபாயை வசூலித்த ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றவராக இருக்கிறார். அதனால் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராகவும் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மிமிக்ரிதான் அடையாளம்: சிவகார்த்திகேயன் இப்போது ஹீரோவாக அறியப்பட்டாலும் அவரை பலரிடம் கொண்டுபோய் சேர்த்தது மிமிக்ரி. ஒவ்வொரு குரலையும் அட்டகாசமாக வெளிப்படுத்தும் அவருக்கென்று அப்போதே பலர் ரசிகர்களாக இருந்தனர். அதன் வெளிப்பாடுதான் அவருக்கு இப்போது சேர்ந்திருக்கும் ரசிகர் கூட்டம்.

விஜய்க்கு அடுத்து: குறிப்பாக விஜய்க்கு எப்படி சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர்களாக உள்ளனரோ அதேபோல் சிவாவுக்கு இருக்கின்றனர். இதுவே அவரது வெற்றிக்கு முக்கிய காரணம். டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களில் நடித்து நூறு கோடி ரூபாய் வசூல் செய்த ஹீரோவாக மாறிய சிவாவுக்கு பிரின்ஸ் அடி கொடுத்தது. இதனையடுத்து அவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார்.

இன்று ரிலீஸ்: மண்டேலா படத்தின் மூலம் தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஷ்வின் என்பதால் மாவீரன் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படமானது இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். பிரின்ஸ் தோல்வியை இதில் மறக்கலாம் என நினைத்திருக்கும் சிவாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இன்னும் சில மணி நேரங்களில் படத்தின் ரிசல்ட் தெரிந்துவிடும்.

போதையில் மிஷ்கின்: இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் ஒருமுறை மிமிக்ரி செய்தபோது மிஷ்கின் முழு போதையில் அவரிடம் பேசியது குறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது ஒரு நிகழ்ச்சியில் மிஷ்கின் நன்றாக குடித்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் வந்தவர்கள் தங்களிடம் இருக்கும் திறமையை வெளிகாட்ட வேண்டும் என ஜாலியாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்போது சிவாவோ தன்னிடம் இருக்கும் மிமிக்ரி திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்.

நீ வேற பண்ணு: அதனை பார்த்துக்கொண்டிருந்த மிஷ்கின், முழு போதையில் சிவகார்த்திகேயனிடம் சென்று நீ மிமிக்ரி நல்லா பண்ற ஆனா வேற பண்ணு. நீ பெரிய ஆளா வரணும் என கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயனும் அதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். காலம் மாறி காட்சிகள் மாறி சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் மிஷ்கினும் இப்போது வில்லனாக நடித்திருக்கிறார். மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனிடம் சென்ற மிஷ்கின் செல்லக்குட்டி அன்னைக்கு நான் அப்படி சொன்னேனே நியாபகம் இருக்கா என கேட்டிருக்கிறார்.

சிவாவின் பதில்: ஆமா சார் நல்லாவே நியாபகம் இருக்கு. அன்னிக்கு நான் மிமிக்ரி பண்ணது என்னுடைய சின்ன அடையாளத்துக்காகத்தான். ஆனால் நான் பெரிய நடிகனாக வேண்டும் என்பதுதான் எனக்குள் அப்போவும் இருந்துச்சு என கூறியிருக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் மிஷ்கின் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.