![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/NTLRG_20230713155400624449.jpg)
எதிர்நீச்சல் சீரியல் வாய்ப்பை முதலில் மறுத்தேன் : மனம் திறக்கும் ஆதிரை
எதிர்நீச்சல் தொடர் மக்களின் பேவரைட்டாக இருந்த போதிலும், ஆதிரை – கரிகாலன் திருமண டிராக் தான் டிஆர்பியில் முதலிடத்தை வாங்கிக் கொடுத்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் ஆதிரையின் கதாபாத்திரம் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கதாபாத்திரத்தில் சத்யா தேவராஜன் என்பவர் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்திருந்தாலும், அந்த தொடர்களில் அவரது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் நடிப்பது குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்த சத்யா, ஆரம்பத்தில் எதிர்நீச்சல் தொடர் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்ததாகவும், அதன்பின் கதை கேட்ட பிறகு தான் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும், எதிர்நீச்சல் தொடரில் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருந்தால், இந்த உலகில் தன்னை விட பெரிய முட்டாள் யாருமே இருந்திருக்க மாட்டார்கள் என்றும் நெகிழ்ந்து கூறியுள்ளார்.