சபரிமலை: சபரிமலை கோவில் நடை ஜூலை 16 மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. ஜூலை 17 அதிகாலை ஆடி மாத பூஜை தொடங்குகிறது.
ஜூலை 16ல் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின், 18ம் படிக்கு கீழே ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும். தொடர்ந்து, பக்தர்கள் படியேறி தரிசனம் செய்வர். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஜூலை 17 அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும் ஆடி மாதத்தையொட்டி தந்திரி கண்டரரு ராஜீவரரு நெய் அபிஷேகம் செய்வார். தொடர்ந்து, கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
ஜூலை 21 வரை தினமும் அதிகாலை 5:00 முதல் காலை 11:00 வரை நெய்யபிஷேகம், 7:30 மணிக்கு உஷபூஜை, 12:30 மணிக்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்சபூஜை, மாலை, 6:30 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும்.
ஜூலை 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement