சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ள இந்தப்படத்தின் முதல் காட்சியை பார்க்க காலையில் இருந்தே ரசிகர்கள் திரையரங்கிற்கு குவிய ஆரம்பித்து விட்டனர்.
டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து மாவீரனில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கடந்த சில நாட்களாகவே இந்தப்படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரின்ஸ்’ படம் படு தோல்வியை சந்தித்தது. இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன், ‘மாவீரன்’ படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
யோகி பாபு நடிப்பில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்த ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினின் இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ உருவாகியுள்ளது. வடசென்னை பின்னணியில் அரசியல் கதைக்களமாக இந்தப்படம் உருவாகியுள்ளது. மேலும், மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வானத்திலிருந்து கேட்கும் அசரீரி குரலுக்காக நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘மாவீரன்’. இந்தப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சென்னையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வருகை தந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. காலை ஒன்பது மணியில் இருந்து ‘மாவீரன்’ படத்தின் முதல் காட்சி துவங்கியுள்ளது.
KH 233:டிராப் ஆன படத்தை தூசி தட்டும் ஆண்டவர்: ‘கமல் 233’ படம் குறித்த சூப்பரான தகவல்.!
‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் – மடோன் அஸ்வின் காம்போ எந்தளவிற்கு ஒர்கவுட் ஆகும் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. அத்துடன் வில்லனாக நடித்துள்ள மிஷ்கின், நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்துள்ள சரிதா இவர்களின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பதும் ஆடியன்ஸ் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இதெல்லாம் பக்காவாக அமைந்து விட்டால் படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘மாவீரன்’ படம் முழுவதுமாக பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மாவீரனில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ‘மாவீரன்’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
Vijay: விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்.?: பரபரக்கும் கோலிவுட்.!