வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோவிற்கு தலைவர்கள், முன்னாள் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம், விண்வெளி துறையில் இந்தியா புதிய பயணத்தை துவக்கி உள்ளது. இந்தியாவை தலைமுறை தலைமுறையாக போற்றும் வகையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா:
பெருமைமிக்க தருணம். இந்தியாவிற்கு வாழ்த்துகள். சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கும் வாழ்த்துகள். இந்த பெருமை மிக்க தருணம், அனைத்து இந்தியர்களின் மனதிலும் நிலைத்து நிற்கும்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறுகையில்,
இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள். அனைவரும் அளித்த ஆதரவும் வாழ்த்தும் அளப்பறியது. இனிமேல் வரும் அனைத்து திட்டங்களும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement